இரு தரப்புகள், இப்பொழுது
பிறந்ததிலிருந்து இறக்கும் வேளை வரை, இடையில் அதிகம் வாழவேண்டியது உண்டு.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், நியாபகங்கள் மற்றும் கலந்த உணர்ச்சிகளின் பாத்திரமாக திகழும்.தினசரி வாழ்வில், ஏதாவது ஒன்றை இழப்பதும் ஏதாவது ஒன்றை பெறுவதும் இயல்பே.
இரு தரப்புகள், இப்பொழுது என்பது,3 வாரங்களுக்கு கூ டெக் புஹாட் மருத்துவமனையில் இடம்பெறவிருக்கும், ஒரு பலவகைப்பட்ட நிபுணத்துவம் கொண்ட உட்செலுத்தும் கலை அனுபவம். நன்றாக வாழ்வதும் நன்றாக இறப்பதும் என்றால் என்ன எனும்தங்கள் எண்ணங்களையும் கதைகளையும் ஈடுபட்டு, நினைவுகூர்ந்து பகிர்ந்து கொள்ள, பார்வையாளர்களை அது வரவேற்கிறது– இரு தரப்பிலிருந்து மீண்டும் ஒரு நோட்டம்.
மரணம் மற்றும் இறப்பைப் பற்றி பேசுவது, ஆரோக்கியம் குன்றிய அல்லது தீண்டபடாத, பயங்கரமான அல்லது சோகமான ஒன்றாக இருக்க தேவையில்லை. அது சுலபமான, அன்பான, நம்பிக்கை தரக்கூடிய மற்றும் நிதானமான ஒன்றாக இருக்கலாம்.நாம் எவ்வாறு வாழலாம் என்றும் நமக்கு எது முக்கியம் என்றும் அது நமக்கு நியாபகப்படுத்தும்.
பதிலளிக்க ஒரு அழைப்பு
உங்களுக்கான வாழ்வின் இறுதிகட்ட விஷயங்களைப் பற்றி எண்ணியதுண்டா, அல்லது வாழ்வின் இறுதிகட்ட பராமரிப்பை பற்றிய உங்கள் அன்புள்ளவர்களின் எண்ணங்களும் விருப்பங்களும் என்னவென்று அல்லது அவர்கள் அவர்களுக்கான முடிவுகளை எடுக்கமுடியாத ஏதேனும் ஒரு கட்டத்தைப் பற்றி யோசித்ததுண்டா?
உங்கள் அன்புள்ளவரிடமும் நண்பர்களிடமும் இந்த விஷயங்களைத் தொட்டு உரையாடியது உண்டா?
இதனைத் தொட்டு உரையாட, இந்த கேள்விகளைச் சேர்த்துகொள்ளலாம்:
- நன்றாக வாழ்வதற்கு, எந்த நடவடிக்கைகள் அல்லது அனுபவங்கள் மிக முக்கியமானவை?
- வாழ்வில் பெரும் சவால்களைச் சமாளிக்க எது உதவும்?
- வாழ்வது, உங்கள் உடல்நலம் மற்றும் மருத்துவ பராமரிப்பை பற்றி உங்கள் அச்சங்களும் கவலைகளும் யாவை?
- வாழ்வின்-இறுதி-கட்ட பராமரிப்பைப் பற்றி உங்கள் விருப்பங்கள், கோட்பாடுகள் மற்றும் திட்டங்கள் என்ன?
- உங்களால் சொந்த முடிவுகள் எடுக்க முடியாத வேளையில், உங்கள் நலன் கருதி செயல்படகூடிய, நீங்கள் நம்பும் யாராவது இருக்கிறார்களா?
- வாழ்வின்-இறுதி-கட்ட அனுகுமுறை மற்றும் மரணத்திற்கான நீங்கள் விரும்பும் இடம் எது?
இந்த உரையாடல்களை மேற்கொள்வதும், முன்கூட்டிய கவனிப்புத் திட்டம் (ACP) எனும் ஒரு செய்முறையின் பகுதி.
முன்கூட்டிய கவனிப்புத் திட்டம் இருப்பது முக்கியம், ஏன் என்றால் மருத்துவ தொழில்னுட்ப முன்னேற்றத்தால் அதிக வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் தோன்றுவிக்கும் வேளையில், அச்சிகிச்சைகள் அனைத்தும் குணபடுத்துவதிலும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் முடிவடைவதில்லை. சில சிகிச்சை முறைகள் உடல் வலி கொடுப்பதோடு, நோயாளிக்கும், அன்புக்குறியோர் படும் அவதியை காணும் பராமரிப்பாளருக்கும், தவிர்க்க முடியாத அதிக வேதனையை தரும். மரணத்தை ஏற்கனவே எதிர்நோக்கும் ஒருவருக்கு, சில மருத்துவ சிகிச்சை முறைகள் பயனற்றனவாய் இருக்கும் வேளையில், வாழ்க்கையை நீட்டிக்க இச்சிகிச்சைகள் வேண்டாம் என்ற தெளிவான விருப்பத்தை ஒருவர் வெளிப்படுத்தினாலொழியே, அவை உடல்நலகவனிப்பு வழங்குபவரால் நிருவகிக்கப்படும்.
நாம் பராமரிப்பாளராக நேரும்பொழுதும்,நம் பராமரிப்பில் இருப்பவர்கள் முடிவெடுக்கும் நிகழ்முறை எளிதாக இருக்க உதவி செய்யும் பொழுதும்,வாழ்வின் இறுதி கால விஷயங்களைத்தொட்டு யோசிப்பதும்உரையாடுவதும் நம்மை தயார்படுத்த உதவுதிறது. இவ்விஷயங்களைப் பற்றி முதலில் நாம் அறிந்துகொண்டோமானால், நாம் பராமரிப்புச் சேவையை வழங்கும்போது, தகுந்த தகவல், மாற்றார் உணர்வு அறிதல் மற்றும் நுண்ணறிவோடும் அனுகலாம்.
உங்களுடைய முன்கூட்டிய கவனிப்புத் திட்டத்தை எவ்வாறு தயார் செய்வது என அறியவும், அதனை பற்றிய மேல் விவரங்களுக்கும் இங்கே அழுத்துங்கள்.
பின்னனி
இரு தரப்புகள், இப்பொழுது- அதன் நோக்கம், உடல் நல கவனிப்பு வழங்குபவர், பராமரிப்பு சேவை வழங்குவோர், பொது மக்கள் ஆகியோர் இடையே புரிந்துணர்வு ஏற்படுத்துவதும், அகப் பிரதிபலிப்பை ஊக்குவிப்பதும், வாழ்வின் இறுதி கால விஷயங்கள் பற்றிய கலந்துரையாடலைத் தூண்டிவிடுவதுமாகும். வாழ்வின் இறுதி கால அக்கறைகளையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்வதையும், மரணம் மற்றும் இறப்பு இயற்கையான ஒன்று என்றும் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்று என்றும் அடையாளம் காணுவதையும்,முன்னதாக யோசிப்பது தவறில்லை
நம்பிக்கையுடனும், மரியாதையுடனும் மரணம் மற்றும் இறப்பதைப் பற்றி மனந்திறந்து பேசினால்,வாழ்வின் இறுதி கால ஆசைகளைப் பற்றி அதிக தெளிவு கிடைப்பதோடு, எவ்விதமான, எத்தரமான, எவ்விடத்தில் பராமரிப்பை நாம் விரும்புகிறோம் என்ற முடிவுகளைச்சொல்லவும் முடியும்.
மனிதர்களாய் நாம் எல்லோரும் வித்யாசமானவர்கள், வினோதமானவர்கள் –வாழ்வதும் இறப்பதும் பற்றி வெவ்வேறு கொள்கைகளும் அனுகுமுறைகளும் கொண்டவர்கள். எந்த இரு வாழ்வும்இறப்பும்,அதே போன்று இருப்பதில்லை. வாழ்வதிலும் இறப்பதிலும் நாம் தேர்வுரிமைசெய்ய வேண்டும். அதுவும் அதனை உணர்ந்து செய்யும் போது, நமக்கும், நம்மை சுற்றி இருப்போருக்கும், நாம் விட்டு செல்வோருக்கும் அர்த்தமுள்ள அனுபவங்களை நாம் உருவாக்க முடியும்.