முன்கூட்டிய கவனிப்புத் திட்டம் (ACP)

இது நமது காப்பகப்படுத்தப்பட்ட இணையதளம். வெளியிடும் நேரத்தில் அனைத்து தகவல்களும் சரியானவை.

முன்கூட்டிய கவனிப்புத் திட்டம் (ACP),அனைவருக்கான, வயது மற்றும் உடல்நிலை பொருட்படுத்தாத ஒன்று. இது உங்கள் உடல்நிலையைப் புரிந்துக்கொள்ள உதவும், தன்னிச்சையான கலந்துரையாடல்கள் தொடர். உங்களால் இயலாத பொழுது, உங்கள் உன்னத நலன் கருதி, உங்களுக்கான உடல்நல பராமரிப்பு முடிவுகளை உடல்நல கவனிப்பு வழங்கும் குழுவினர் மற்றும் உங்கள் அன்புள்ளவர்கள் எடுக்க, பதிவு செய்யப்பட்ட உங்கள் விருப்பங்கள் வழிகாட்டியாக இருக்கும்.

கலந்துரையாடல்களில் பங்குபெருபவர்கள், பயிற்சிபெற்ற ACP ஒருங்கிணைப்பாளர், உங்கள் அன்புள்ளவர்கள், உங்களுக்கான உடல்நல பராமரிப்பு சேவை அளிப்பவர்கள் மற்றும் நீங்கள். உங்கள் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் இந்த கலந்துரையாடல்களை வழிகாட்டும்.

உடல்நல பராமரிப்பு தேர்வுகள் பற்றிய உங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் உங்கள் அன்புள்ளவரிடம்,முன்கூட்டிய கவனிப்புத் திட்டத்தின் மூலம் பகிர்ந்துகொள்ளலாம். உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் மன அமைதியையும், இது அவர்களுக்குக் கொடுக்கும்.

முன்கூட்டிய கவனிப்புத் திட்டம் பற்றிய கலந்துரையாடலின் போது இந்த கேள்விகள் கேட்கப்படும்:

  • நன்றாக வாழ்வதற்கு, எந்த நடவடிக்கைகள் அல்லது அனுபவங்கள் மிக முக்கியமானவை?
  • வாழ்வில் பெரும் சவால்களைச் சமாளிக்க எது உதவும்?
  • வாழ்வது, உங்கள் உடல்நலம் மற்றும் மருத்துவ பராமரிப்பை பற்றி உங்கள் அச்சங்களும் கவலைகளும் யாவை?
  • வாழ்வின்-இறுதி-கட்ட பராமரிப்பைப் பற்றி உங்கள் விருப்பங்கள், கோட்பாடுகள் மற்றும் திட்டங்கள் என்ன?
  • உங்களால் சொந்த முடிவுகள் எடுக்க முடியாத வேளையில், உங்கள் நலன் கருதி செயல்படகூடிய, நீங்கள் நம்பும் யாராவது இருக்கிறார்களா?
  • வாழ்வின்-இறுதி-கட்ட அனுகுமுறை மற்றும் மரணத்திற்கான நீங்கள் விரும்பும் இடம் எது?

மேல்விவரங்களுக்கும் இணையத்திலிருந்து ACP சிறுவெளியேடு எடுக்க (4 மொழிகளிலும் உள்ளன), பார்வையிடுங்கள்: www.livingmatters.sg