முகவுரை

இறப்பு பல விதமான பதிலுணர்வுகளை வெளிவறச் செய்யும் – அதனைப் பற்றி சிலர் விரக்தியுடன், ஒரு முடிவுடன் பேசுவார்கள், ஒரு சிலர் சாதாரனமாகவும், பொறுப்பற்ற முறையிலும் கூட, மரணத்தைத் துணிவான சாகசம் என விடுவித்தும் எதிர்ச்செயலாற்றுவார்கள்.

உடல்நல கவனிப்பு வழங்குபவர், பராமரிப்பு சேவை வழங்குவோர் மற்றும் நோயாளிகளிடம் நாங்கள் நடத்திய ஆராய்ச்சி மற்றும் பேட்டிகளிலும் எங்களுக்குத் தட்டுபட்ட ஒன்று, மரணத்தை பற்றி பேசும்போது, அவர்கள் பெரும்பாலம் பேசியது மற்ற விஷயங்களைப் பற்றி தான். இறுக்கந்தளர்வுற நூலை இழுக்கும் போது, ஒரு ஓவியத்திரை மொத்தமாக தளர்த்து வருவது போல், வாழ்வின்-இறுதி-கட்ட விஷயங்களைச் சாமாளிப்பதில், பல சிக்கலான உறவுகள் சம்பந்தபட்டிருப்பார்கள். மரணத்தை தாமே எதிர்நோக்கவேண்டும், ஆனால் அது, தனிபட்ட முறையில், சமூக ரீதியில் மற்றும் கலாச்சார ரீதியில் வாழ்க்கை எப்படி வாழபடுகிறது என்றும் வாழ்பவரை பாதிக்கும்.

மரணம் மற்றும் இறப்பு பற்றிய தலைப்பைத் தொட்டு, பல நிலையில் பார்வையாளர்கள், அறிவுப்பூர்வமாக மட்டுமல்லாமல் உணர்ச்சிவசமாகவும் ஆத்மபூர்வமாகவும் ஈடுபட, ஒரு கலைவேலையை உருவாக்க, இதனை படைக்கும் குழு எண்ணினர். மக்கள் தங்களுக்குள் எட்டி, தங்களுடைய புதைந்த பயங்கள் மற்றும் ஆசைகளை மீண்டும் கண்டுபிடிக்கவும், நீண்ட காலமாக வாயடைக்கப்பட்டவைக்கு குறல் கொடுக்கவும் வேண்டும் என நாங்கள் விரும்பினோம்.

உணர்ச்சியூட்டுவது, அச்சுறுத்துவது, நம்பிக்கை தருவது, வெறித்த நிலை அடைவது, பிடித்து கொள்வது, விட்டு விடுவது என, எல்லா சாத்தியமான வழிகளில், வாழ்வதும் இறப்பதும் பற்றி சிந்திக்கவும் பேசவும், அவ்விடத்திலுள்ள உட்செலுத்தும் கலை அனுபவத்தின் மூலம், ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்க நம்புகிறோம். வாழ்வதும் இறப்பதும் இயற்க்கையான ஒன்று, வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை இந்த வேலைபாடுகள் நமக்கு நினைவூட்டும். இந்த சவால்மிக்க விஷயங்களைப் பற்றி யோசித்து பார்த்து, நாம் இவ்விஷயத்தை நோக்கும் நிலை எங்கே உள்ளது என்ற தெளிவு பெற்றால் தான், வாழ்வதும் இறப்பதும் பற்றிய கடினமான முடிவுகளை எடுக்க நமக்கு சக்தி இருக்கும்.

தங்களது நேரத்தை மட்டுமின்றி முக்கியமாக அவர்களில் ஒரு பகுதியையும் தந்த பேட்டியளித்தோர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். அது ஒரு தற்பெருமையற்ற அனுபவமானது. ஒவ்வொரு இறப்பிலும் வாழ்வதைப் பற்றி அதிகமாக கற்பதையும்; ஒவ்வொரு கதையிலும் மனித உணர்ச்சி போராடி செழிப்படைவதை நாம் காண்பதையும், உணர இவர்கள் உதவியுள்ளனர்.

நாங்கள் உங்களை இந்த இடத்திற்குள் வரவேற்று, நீங்களும் எங்களுடன் சிறிதளவு நடக்க அழைக்கிறோம். நாம் எல்லோரையும் பிணைந்து இணையக்கூடிய உலகளாவியவை என்ன என்று, இந்த குறிப்பிட்ட கதைகள் மூலம் கண்டறிவோம்.